

பெண்களுக்குப் பரவலாக ஏற்படுகிற பிரச்சினைகளில் முதன்மை யானது சிறுநீரகம், கருப்பை சார்ந்த நோய்கள். இவை பெண்களுக்கு உடல்ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மனரீதியாகத் தளர்வை ஏற்படுத்தும் தன்மையுடையவை. இத்தகைய பாதிப்புகளிலிருந்து பெண்களை விடுவிக்க இந்தியாவில் சிறுநீர்ப்பாதையியல் (Uro logy) துறையில் நிபுணத்துவம் பெற்ற போதுமான பெண் மருத்து வர்கள் இல்லை என்கிறார் மருத்துவப் பேராசிரியரும் மகளிர் சிறுநீர்ப்பாதையியல் சிறப்பு மருத்து வருமான ராஜமகேஸ்வரி.
இந்தியாவில் சிறுநீர்ப்பாதையியல் துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 6,000. அதில் 2.5% மட்டுமே பெண் மருத்துவர்கள் உள்ளனர் எனச் சுட்டிக் காட்டும் ராஜமகேஸ்வரி, இந்த எண்ணிக்கை அதி கரிக்க வேண்டும் என உறுதிபடக் கூறுகிறார்.