

இதயத்தில், ‘வி.எஸ்.டி’ (VSD) துளை பெரிதாக இருக்கும் குழந்தைகளுக்கு நாக்கும் நகங்களும் நீல நிறத்தில் காணப்படும் என்று கடந்த கட்டுரையில் சொல்லியிருந்தேன். இதேபோல், சில குழந்தைகள் அழும்போது சருமம் முழுவதும் நீல நிறமாக மாறும். இவர்களை ‘நீலக் குழந்தைகள்’ (Blue Babies) என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு என்ன காரணம்?
நான்கு வகை குறைபாடுகள்: கருவிலேயே உருவாகும் இதய நோய்களை ‘நீலம் பூக்கும்’ வகை (Cyanotic), ‘நீலம் பூக்காத’ வகை (Acyanotic) என இரண்டு விதமாகப் பிரிக்கிறது மருத்துவம். முதல் வகை இதய நோயானது குழந்தைகளுக்கு நீல நிறத்தை உண்டுபண்ணுகிறது.