

குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தாய்ப்பாலுக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. குழந்தைகளின் இயல்பான - ஆரோக்கிய மான வளர்ச்சிக்குத் தாய்ப்பாலே முழுமையான உணவு. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் எளிதில் செரிமானம் அடையக்கூடியது.
அதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், விட்டமின்கள், தாதுக்கள், திரவங்கள் போன்றவை குழந்தைக்குத் தேவை யான அளவில் உள்ளன. முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது ஆஸ்துமா, இரைப்பைக் குடல் நோய்த்தொற்றுகளைக் குறைப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியைக் குழந்தைக்கு வழங்குகிறது.