

‘மைட்ரல் வால்வுச் சுருக்க’த் துக்கு (Mitral Steno sis) இதயத்தைத் திறந்து மேற் கொள்ளப்படும் சிகிச்சை குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம். இதயத்தைத் திறக்காமலும் மைட்ரல் வால்வை மாற்றலாம். இந்தச் சிகிச்சைக்கு ‘டிஎம்விஆர்’ (TMVR) என்று பெயர். அதாவது, ‘Trans catheter Mitral Valve Replace ment’.
மைட்ரல் வால்வுதான் என்றில்லை, அயோர்டிக் வால்வு, ட்ரைகஸ்பிட் வால்வு போன்றவை பழுதானாலும் அந்தந்த இடங்களில் செயற்கை வால்வுகளைப் பொருத்திவிடலாம். மைட்ரல் வால்வை மாற்றுவதுபோல்தான் எல்லாச் செயல்முறையும். இந்த முறையில் செயற்கை அயோர்டிக் வால்வைப் பொருத்திக்கொண்ட ஆனந்தமூர்த்தியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.