

உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் கொழுப்பு - எண்ணெய்களின் பங்குமுக்கியமானது. எனினும், தவறான தகவல்களால் அவை எப்போதும் ‘வில்லன்க’ளாகச் சித்தரிக்கப்படுகின்றன. உணவில் எண்ணெய் - கொழுப்பைத் தவிர்க்க விரும்பும் நபர் நீங்கள் என்றால், முதலில் உடலில் அதன் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும் கொழுப்பு நமது உடலுக்கு இன்றியமையாத பொருள். ஒரு கிராம் கொழுப்பு 9 கிலோ கலோரி ஆற்றலைத்தருகிறது.
இதுவே ஒரு கிராம் கார்போஹைட்ரேட் அல்லது புரதம் தரும் 4 கிலோகலோரி ஆற்றலுடன் ஒப்பிடும்போது அதிகம். மேலும், கொழுப்புகள் விட்டமின் ஏ,டி,இ,கே போன்ற கொழுப்பில் கரையும் விட்ட மின்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கும் பரவுவதற்கும் உதவுகின்றன. எனவே, ஆரோக்கியமான கொழுப்பைச் சரியான அளவு உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம்.