

கண் மருத்துவத்தில் நோயாளிகளிடையே காணப்படும் அறியாமை பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. கண்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத பலரும் தீவிரமான கண் பாதிப்புகளில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன.
சீதாப்பழ விதைகளும் கண் பாதிப்பும்: தாங்கிக்கொள்ள முடியாத கண் வலி - சிவந்த கண்களுடன் கண்களைத் திறந்தாலே அழுகின்ற இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கண் மருத்துவமனைக்குத் தாய் ஒருவர் வந்தார். அந்தக் குழந்தைகளைப் பரிசோதித்த கண் மருத்துவர், அவர்களது கண்ணின் வெள்ளைப் படலம் (Conjunctiva), கருவிழி (Cornea) வீங்கி இருப்பதைக் கண்டறிந் தார்.