

மைக்ரெய்ன் எனப் படும் ஒற்றைத் தலைவலி, மூளை நரம்பி யல் சார்ந்த நோயாகும். உலகில் பத்தில் ஒருவருக்கு மைக்ரெய்ன் எனும் ஒற்றைத் தலைவலி ஏற்படு கிறது. ஆண்களைவிடப் பெண்களுக்கு மைக்ரெய்ன் தலைவலி அதிகமாக ஏற்படு கிறது.
மைக்ரெய்ன் தலைவலி ஏற்படுவதற்கான மரபணுக் காரணிகள் கண்டறியப் பட்டுள்ளன. அதாவது தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மைக்ரெய்ன் ஏற்பட்டால் அவர்களின் பிள்ளை களுக்கு ஏற்பட 50 முதல் 75% சாத்தியம் உள்ளது. இந்தத் தலைவலி ஏனைய தலைவலிகளைவிடத் தீவிரமான, கூர்மையான வலியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.