

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நோய்கள் பரவுகின்றன. இந்நோய்கள் பெரும்பாலும் விலங்குகளிடம் நேரடி யாக பெரும்பாலும் தொடர்புள்ளவர்களையே அதிகம் தாக்குகின்றன.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நோய்களின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாது காத்துக்கொள்ள இயலும். மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களில் வெறிநாய்க்கடி மூலம் ஏற்படும் வெறி நோய், புருசில்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு, ஆந்த்ராக்ஸ் எனப் படும் அடைப்பான், லெப்டோஸ்பை ரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், சமீபகாலமாகத் தீவிரமாக உருவெ டுத்துவரும் நிபா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்றவை முக்கிய மானவை.