

சமீபத்தில் விபத்தில் காய மடைந்த முதியவர் ஒருவர் கண் பரிசோதனைக்காகக் கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவரின் இரண்டு கண்களிலும் கண்நீர் அழுத்தம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். இதனால் இரு கண்களிலும் பார்வை நரம்பு 90% பாதிக்கப்பட்டு அவருக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டதை உறுதி செய்தார்.
அந்த முதியவர் சாலையில் பயணிக்கும்போது அவருக்குப் பார்வை தெரியும். ஆனால், பக்க வாட்டில் வரும் வாகனங்கள் எதுவுமே அவர் கண்ணுக்குத் தெரியாது. இத னால் சாலை விபத்துகளும் ஏற்படும். கண்நீர் அழுத்தம் அதிகமாகி, பார்வை நரம்பு பாதிப்பு அடைந்து, பார்வையைப் பாதிப்பதைத்தான் ‘கிளாகோமா’ என்கிறோம். எந்தவித மான அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படும் கிளாகோமா, நம் பார்வையை ரகசியமாகப் பறித்து இருள் சூழ்ந்த உலகிற்கு அழைத்துச் செல்லும்.