

புகைப்பழக்கத்தை நிறுத்த வழி சொல்லும்போது, ‘புகைப்பழக்கத்தைப் படிப்படியாக நிறுத்துவது நல்லது’ என்று ‘இதயம் போற்று’ தொடரில் சொல்லியிருந்தேன். இதைப் பின்பற்றிக் ‘குடிப்பதைப் படிப்படியாக நிறுத்தி விடுவேன்’ என்று குடிநோயாளி சொன்னால் நம்பாதீர்கள். மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் இது சாத்தியமில்லை.
‘குடி’ என்னும் நோய்: ஒருவரைக் ‘குடி நோயாளி’ (Alcoholic) என்று அழைப்பதற்குக் காரணமே அவருக்குக் ‘குடி’ என்னும் நோய் இருக்கிறது என்பதால்தான். எப்படி, ஒருவருக்குச் சர்க்கரை நோய், இதய நோய் என்று வந்து விட்டால் அதற்கு மருத்துவச் சிகிச்சை அவசியமோ, அப்படித்தான் குடிநோய்க்கும் மருத்துவம் பார்க்க வேண்டியது அவசியம்.