

புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர் களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்ப தாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்குப் பரவலாகக் காணப்படும் நுரையீரல் அடினோகார்சினோமா எனும் புற்றுநோய் பெண்களில் 60% ஆகவும், ஆண்களிடம் 45% ஆகவும் பதிவாகியுள்ளது. 2022இல் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிக மானோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
காற்று மாசு, மரபணுக் கடத்தல், நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பைத் தூண்டுகின்றன. குறிப்பாக, மரபணுக்கள் காரணமாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகள், கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி ஆகியவையும் சுவாசப் புற்றுநோயைத் தூண்டு கின்றன. புகைபிடிக்காத ஆசியப் பெண்களில் 50% பேரிடமும், புகை பிடிக்காத மேற்கத்திய பெண்களில் 19% பேரிடமும் நுரையீரல் அடினோகார்சினோமா காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.