

இன்றைய தினம் உலகிலேயே அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள்! குடிப்பழக்கத்தால் கல்லீரல்/கணையம்/இரைப்பை ஆகியவை கெட்டு, புற்றுநோய் வந்து நேரடியாகவும், குடி போதையில் விபத்து, வன்முறை, தற்கொலை போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு லட்சத்தைத் தாண்டுகிறது.
தமிழகத்தில் இந்த நிலைமை மிகவும் மோசம். இங்கு சுமார் ஒரு கோடி பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’. இந்த எண்ணிக்கையில் 10லிருந்து 15 வயதுக்கு உள்பட்ட சிறாரும் இருக்கின்றனர்.