

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஜிபிஎஸ் எனும் கில்லன் பாரே சிண்ட் ரோம் (Guillain-Barre Syndrome) கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது. இதுவரை 163 பேருக்கு கில்லன் பாரே சிண்ட்ரோம் நோய் பாதித்துள்ளது. இதில் 47 பேர் தீவிர சிகிச்சையிலும், 21 பேர் செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையிலும் உள்ளனர்.
நரம்புச் செயலிழப்பு: கில்லன் பாரே சிண்ட்ரோம் என்பது நமது உடலின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோய் நிலையாகும். தசைகளுக்கு உணர்வூட்டும் நரம்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தி வாதத்தை ஏற்படுத்தும் நோய் இது. சிலருக்கு இதன் விளைவாகத் தசைகள் வலுவிழந்து தளர்வுறுகின்றன.