

மாரடைப்பு வந்தவர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்களாகிய நாங்கள் சொல்வோம். உயிர் மேல் இருக்கிற ஆசையால் பெரும்பாலானோர் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், மற்றவர்கள் அடுத்த ஒரு வருடத்தில், “நெஞ்சு வலிக்கிறது” என்று மருத்துவமனைக்கு அவசரமாக வருவார்கள். காரணம் பார்த்தால், அவர்கள் மறுபடியும் புகைப் பழக்கத்துக்கு ஆளாகியிருப் பார்கள்.
“ஏன்?” என்று கேட்டால், “புகைப் பதைக் கைவிட முயற்சி செய்கிறேன், டாக்டர். ஆனால், முடியவில்லை” என்பார்கள். “புகைப்பதை நிறுத்தத் தான் நினைக்கிறேன். அதற்கு அறிவுரைகள் மட்டும் போதவில்லை. மாற்றுவழிகள் இருந்தால் சொல்லுங்கள், டாக்டர். முயல்கி றேன்” என்று கேட்பவர்கள்தான் அதிகம்.