

தலைப்பை வாசித்ததும் அரிதாகச் சிலரிடம் காணப் படும் ஆறாவது விரலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தினமும் பலரது விரலோடு விரலாக உறவாடும் சிகரெட்டைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். இந்தத் தொடரில் ‘சிகரெட்/பீடி புகைக்க வேண்டாம்; புகைபிடிப்பது இதயத் துக்கு ஆபத்து; மாரடைப்புக்கு அது வழிகாட்டும்’ என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.
என்ன காரணம்? - இன்றைக்கு இதயநோய்கள் குறித்து அதிகம் அச்சப்படுவதற்கு முக்கியக் காரணமே, இளம் வயதின ருக்கும் மாரடைப்பு வருகிறது என்பதுதான். இப்படி, இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கும், திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கும் ‘இதயத் துடிப்புக் கோளாறு’கள் (Arrhythmias) முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், இரண்டு சமூகக் காரணங்களை முக்கியமாகச் சொல் லலாம். ஒன்று, புகைபிடிப் பது. அடுத்தது, மது அருந்துவது. இந்த வாரம் புகைபிடிப்பதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கலாம்.