

கைவைத்தியம், சில சடங்குகள் வழியாக நாம் ஆரோக்கி யமாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு நம் வீடுகளில் பிறந்த குழந்தைகளின் கையில் வசம்பு கட்டியிருப்பார்கள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குச் செரிமான பிரச்சினை ஏற்பட்டால், குழந்தை கையிலுள்ள வசம்பின் வாசத்தை நுகரும் போது தானாகவே செரிமானப் பிரச்சினை சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. இவ்வா றாக நம்முடைய கைவைத்திய முறை நம்பிக்கை குழந்தைப் பிறப்பிலிருந்து ஆரம்பமாகிறது.