

என்னதான் வீட்டைப் பத்திர மாகப் பூட்டிக்கொண்டாலும் மேம்பட்ட பாதுகாப்புக்குக் கண்காணிப்பு கேமராவையும் பொருத்துகிறோம் அல்லவா? அதுமாதிரிதான், ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கச் சரியான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்தாலும் மருத்துவர்களாகிய நாங்கள் மாத்திரைகளையும் பலருக்குப் பரிந்துரைக்கிறோம்.
இந்தப் பரிந்துரையில் பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாரும் நினைக்கிற மாதிரி வெறுமனே கொலஸ்டிரால் எண்களை மட்டும் பார்த்து மாத்திரையைப் பரிந்துரைப்ப தில்லை. உங்கள் வாழ்க்கை முறையைப் பார்க்கிறோம். இணை நோய்களைக் கவனிக்கிறோம். உங்கள் கொலஸ்டிரால் அளவுகள் எந்த அளவில் இதயத்தைப் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஏற்கெனவே இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இத்தனை கணிப்புகளுக்குப் பிறகு தான் மாத்திரையைப் பரிந்துரைக் கிறோம்.