ஆர்.அன்பரசி
நலம் வாழ
ஹோமியோபதி: பக்க விளைவுகளற்ற சிகிச்சை
அதிகரித்துவரும் நோய்களும் அவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹோமியோபதியில் உள்ள பக்க விளைவுகளற்ற மருந்துகளும் அவற்றின் மூலம் கிடைக்கும் நிரந்தர நிவாரணமும் மக்களிடையே ஹோமியோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதாகக் கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் ஆர்.அன்பரசி (BHMS - Bachelor of Homeopathic Medicine and Surgery).
அச்சத்தை ஏற்படுத்தும் நோய்கள்: கரோனா தொற்றுபோல அவ்வப்போது வெளிவரும் திடீர் நோய்கள், மக்களைத் தற்போது அச்சத்தின் பிடியிலேயே வைத்துள்ளன. கரோனா தொற்றுப் பரவலின்போது, நேரடிப் பலன் தரக்கூடிய மருந்துகள் இல்லாமல் மக்கள் தவித்த நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பு அரணாக இருக்க முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருந்தது.
