நலம் வாழ
ஹெச்.எம்.பி.வி வைரஸ்: அச்சம் வேண்டாம்
சீனாவில் 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அதுவரை மனித இனம் சந்தித்திராத புதிய வகை கரோனா வைரஸ் பரவல் வூஹானில் நிகழ்ந்தது. அதற்குப் பின் இரண்டு வருடங்கள் உலகையே முடக்கிப் பெருந்தொற்றாகப் பரவிப் பல லட்சம் உயிர்களை கரோனா காவு வாங்கியது.
அந்தப் பெருந்தொற்று தந்த தாக்கம் இன்னும் நம் மனங்களில் தீரா ரணமாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக சீனாவில் இருந்து வரும் செய்திகள் எதுவாயினும் அதை அச்சத்துடனே நோக்கும்படியாக நமது நிலை மாறி இருக்கிறது. தற்போது சீன மருத்துவமனைகளில் சுவாசப் பாதைத் தொற்றுடன் மக்கள் கூட்டமாகச் சிகிச்சை பெறுவது போன்ற ஒளிப்படங்களும் காணொளி களும் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளன.
