

கொழுப்பு/கொலஸ்டிரால் குறித்துச் சொல்லும் போது சமையல் எண்ணெய் குறித்தும் சொல்ல வேண்டும். இன்றைய ஊடக விளம்பரங்களில் பெண்களைப் பெரிதும் குழப்புகிறவை, சமையல் எண்ணெய் விளம்பரங்கள் தான்.
‘இதயத்துக்கு நல்லது’ என்கிறார் களே… நம்பலாமா? ‘எங்கள் எண்ணெய்யில் கொலஸ்டிரால் இல்லை’ என்கிறார்களே… இது உண்மையா? இப்படிக் கிளைவிடும் பலவிதச் சந்தேகங்களால், சிறந்த சமையல் எண்ணெய்யைத் தேர்வு செய்வதில் பலரும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு ‘எண்ணெய் அகராதி’யைச் சிறிது அறிமுகம் செய்துவிட்டால், சமையல் எண்ணெய்த் தேர்வில் ஜெயித்துவிடுவார்கள்.