

தினமும் பல மணி நேரம் அலைபேசியில் இலக்கின்றி ரீல்களையும் வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களா? இரண்டு, மூன்று மணிநேரம் அலைபேசியைப் பார்த்தும் உருப்படியாக எதுவும் செய்ய வில்லை என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ‘மூளை அழுகல்’ பாதிப்பு இருக்கக்கூடும்.
மூளை என்ன முட்டைக்கோஸா அழுகிப் போவதற்கு என நீங்கள் கேட்கக்கூடும். ஆனால், மூளை அழுகுதல் எனப் பொருள்படும் ‘Brain Rot’ என்கிற சொல்லை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அகராதி 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாகத் தேர்வு செய்திருக் கிறது. 2024ஆம் ஆண்டில் மக்களிடம், குறிப்பாக இணையத்தின் உரையாடல்களில் மிகவும் பிரபலமாக இருந்த வார்த்தையாக ‘பிரெயின் ராட்’ என்னும் மூளை அழுகல் இருந்திருக்கிறது.