

அறந்தாங்கியிலிருந்து வாசகர் ஒருவர் அலைபேசினார். ‘ஆபத்தான கொழுப்பு எது?’ என்கிற தலைப்பில் வந்த கட்டுரையில் முட்டையைப் பற்றிப் பேசவில்லையே! முட்டையில் அதிகமாக கொலஸ்டிரால் இருப்பதாகச் சொல்கிறார்களே, இது இதயத்துக்கு ஆபத்து இல்லையா? இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?’ என்று பல விவரங்களைக் கேட்டார். இந்தச் சந்தேகங்கள் நம் வாசகர்கள் பலருக்கும் இருக்கலாம். ஆகவே, இந்த வாரம் கோழி முட்டை குறித்துப் பேசலாம்.
முட்டை ஒரு முழு உணவு: 50 கிராம் கோழி முட்டையில் 6 கிராம் புரதச் சத்தும் 5 கிராம் கொழுப்புச் சத்தும் இருக்கின்றன. மாவுச் சத்து மிகவும் குறைவு, வெறும் 0.6 கிராம்தான். விட்டமின் - ஏ, இ, பி6, பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய எல்லாமே முட்டையில் இருக்கின்றன. செம்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச் சத்துகளும் இருக்கின்றன.