

மரபு அரிசி வகைகளைச் சோறாகச் சமைத்தோ, இட்லி-தோசையாகவோ சாப்பிட முடியும். பலரும் இன்றைக்கு அவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். சோறுக்கு தங்கச் சம்பா, பிரியாணிக்கு சீரகச் சம்பா, முல்லன் கைமா, இட்லி, தோசை, இனிப்புக்குக் கறுப்புக் கவுனி போன்ற அரிசி வகைகள் சுவையாக இருக்கும். பிஸ்கட் போன்ற மேற்கத்திய-பேக்கரி மூலப்பொருளாக அரிசியைக் கற்பனை செய்திருக்க மாட்டோம். இந்த தீபாவளிக்குப் புதுமையைப் புகுத்தி மரபு அரிசி வகைகளில் பிஸ்கட் தயாரித்துள்ளது 'செம்புலம்' அமைப்பு. அந்த வகையில் மைதா-குளூட்டன்-பாமாயில் இல்லாத பிஸ்கட்கள் இவை.
மரபு நெல் ரகங்களைக் கவனப்படுத்தி, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது. தீபாவளியை ஒட்டி ஊட்டச்சத்து மிகுந்த மரபு அரிசி பிஸ்கெட்டை ஹெரிடேஜ் பைட்ஸ் என்கிற பெயரில் இந்த அமைப்பு தயாரித்துள்ளது. மரபு அரிசி வகைகளை இதுபோல் நவீனச் சுவைகளில் தர முடியும் என்பதை இந்த முயற்சி வாடிக்கையாளர் களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் தருகிறது.
தீபாவளி பரிசுப் பொதியில் நான்கு சுவைகளில் பிஸ்கட்கள் உள்ளன. முல்லன் கைமா அரிசியில் செய்யப்பட்ட பட்டர் பைட்ஸ், கறுப்புக் கவுனி அரிசியில் செய்யப்பட்ட சாகோ டிலைட், தங்கச் சம்பா அரிசியில் செய்யப்பட்ட வீகன் டிலைட், சீரகச் சம்பா அரிசியில் செய்யப்பட்ட ஷார்ட் பிரட் ஆகியவை இந்தப் பொதியில் உள்ளன. நான்கு அரிசி வகைகளுமே பல்வேறு ஊட்டச்சத்துகளைத் தருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவலுக்கு: https://shorturl.at/HTTVs
தொடர்புக்கு: 91 99626 29925 / sempulamss@gmail.com