

சுவை குறைவாக இருக்கும் மத்தி மீனைச் சாப்பிடுவதால் பயன் உண்டா?
ஓமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து அதிகம் கொண்ட மீன் மத்தி. அளவில் சிறியதாக இருப்பதால் உடலில் அதிகக் கழிவுகளும் இல்லாத மீன் இது. மீனின் அளவு சிறியதாகும் நிலையில், அதில் இருக்கும் பாதரசத்தின் அளவும் குறைவாக இருக்கும். கடலில் மீன்வளம் நிலைத்திருப்பதற்கு சின்ன மீன்களை அதிகம் சாப்பிடுவதும், பெரிய மீன்களைக் குறைவாகச் சாப்பிடுவதும் அவசியமானது.
பல்லில் பாதிப்பு ஏற்படுவதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா?
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 98 சதவீதம் பேரின் பற்கள், வேர் கால்வாய் சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பாதகம் ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் பற்களுக்கிடையே மறைந்து கொள்ளும். ஏனென்றால் அங்கே ரத்தவோட்டம் இருப்பதில்லை.
இரைச்சலால் எந்தளவு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது?
தொடர்ந்த இரைச்சலால் மூளையில் கார்டிசால், அட்ரினலின் ஆகியவற்றின் அளவு கூடுகிறது. ஹார்மோன்களின் கொந்தளிப்பால் பக்கவாதம், உயர் ரத்தஅழுத்தம், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாடுகள் தொடங்கி மாரடைப்புவரை ஏற்படுகிறது. அதிக ஒலி மாசுள்ள சூழலில் காதடைப்பானைப் பயன்படுத்தலாம்.