டாக்டர் பதில்கள் 35: குடலிறக்கம் ஏன் ஏற்படுகிறது?

டாக்டர் பதில்கள் 35: குடலிறக்கம் ஏன் ஏற்படுகிறது?
Updated on
2 min read

எனக்கு வயது 26. எனக்குக் கடந்த நான்கு மாதங்களாக ஒவ்வாமை ஏற்பட்டு உடல் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடித்துக்கொள்கிறது. மேலும், அந்த நேரத்தில் பயங்கரமாக அரிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாகச் சரும நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றேன். மருத்துவர் எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது எனக் கூறி மாத்திரைகள் கொடுத்தார். பொதுவாகக் குடலிறக்கம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன? குடலிறக்கத்தைச் சரி செய்வதற்கு அறுவைசிகிச்சை தவிர வேறு என்னென்ன வழிகள் உள்ளன? - கே. கோபாலகிருஷ்ணன், சிதம்பரம்.

பொது வாக, வயிற்றுக்குள் அழுத்தம் அதிகமானால் குடலிறக்கம் ஏற்படும். அளவுக்கு மீறிய உடற்பருமன் இதற்கு ஓர் உதாரணம். தொப்பை உள்ளவர்களுக்கு வயிற்றுத் தசைகளில் கொழுப்பு சேர்வதால் அங்கே அழுத்தம் அதிகரித்து அத்தசைகள் வலுவிழக்கின்றன. இதனால், அவர்களுக்குக் குடலிறக்கம் உண்டாகிறது.

வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் அவற்றின் அழுத்தம் காரணமாகக் குடலிறக்கம் ஏற்படுவது உண்டு. ஆஸ்துமா, தீராத இருமல், அதிகப் பளுவான பொருளைத் திடீரெனத் தூக்குவது, குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், சிறுநீர்த் துளை அடைத்துக்கொள்வது, புராஸ்டேட் சுரப்பி வீங்கிக்கொள்வது போன்ற நிலைமைகளில் குடலிறக்கம் உண்டாகும்.

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும்போது குடலிறக்கம் உண்டாக அதிகச் சாத்தி யம் உள்ளது. எப்படியெனில், மலச் சிக்கலின்போது முக்கி மலம் கழிப்பதால், வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. இது நாளடைவில் வயிற்றறை உட்சுவரைத் தளர்ச்சி அடையச் செய்கிறது. இது குடலிறக்கத் துக்கு வழி அமைக்கிறது.

அடிக்கடி கர்ப்ப மாகும் பெண்களுக்குக் குடலிறக்கம் உண்டாகலாம். முதுமை காரணமாக வயிற்றறைச் சுவர் தளர்ந்து போகலாம். இதனால், வயதானவர்களுக்குக் குடலிறக்கம் ஏற்படலாம். குழந்தைகளுக்குப் பிறவியி லேயேகூடக் குடலிறக்கம் (Congenital hernia) ஏற்படுகிறது.வயிற்றில் ஏற்கெனவே அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்தால், சிலருக்கு அதில் போடப்பட்டிருக்கும் தையல் விலகிக் குடலிறக்கத்துக்கு வழிவிடும். விபத்து காரணமாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.

குடலிறக்கத்துக்கு அறுவைசிகிச்சைதான் நிரந்தரத் தீர்வு தரும். இந்தச் சிகிச்சை மேற் கொள்ள இயலாதவர்களுக்கு ‘வயிற்றுக் கச்சை’ (Abdominal Belt) அல்லது இடுப்பில் வார் (Truss) அணிந்துகொள்ளப் பரிந்துரைப்பது உண்டு. படுத்துக் கொண்டு, குடலிறக்கத்தை முழுவதுமாக வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு, இவற்றில் ஒன்றைத் தேவைக்கு ஏற்பக் கட்டிக்கொள்ளலாம். இவற்றைப் பகலில் மட்டும் பயன்படுத்தினால் போதும்; இரவில் அணியத் தேவையில்லை. இவை தற்காலிகத் தீர்வுதான் தரும்; குடலிறக்கத்தைச் சரிசெய்யாது.

அந்த மாத்திரைகளை உட்கொண்டால் எனக்குத் தடிப்புகள் ஏற்படுவதில்லை. மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மீண்டும் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன? மேலும், அந்த மாத்திரை களைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பக்க விளைவு ஏதேனும் ஏற்படுமா? - ரமேஷ் கிருஷ்ணன்.

உங்கள் பிரச்சினை ஒவ்வாமையின் வெளிப்பாடு போல்தான் தோன்றுகிறது. ஒவ்வாமை தவிர உடலுக்குள் ஒளிந்திருக்கும் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். முதலில் உங்களுக்கு ஒவ்வாமைக்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வாமை இல்லை யென்றால், உடலுக்குள் நோய் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

அதற்குப் பலதரப்பட்ட பரிசோதனைகள் இருக்கின்றன. உங்கள் மருத்துவர் மூலமே அவற்றை மேற்கொண்டு, காரணம் தெரிந்து சிகிச்சை பெறுங்கள். குணம் கிட்டும். மேலும், ஒவ்வாமைக்காக வழங்கப்படும் மாத்திரைகளால் அவ்வளவாகப் பக்கவிளைவுகள் ஏற்படாது. சிறிது உறக்கநிலை இருக்க வாய்ப்பிருக்கிறதே தவிர, பயப்படும் அளவுக்குப் பக்கவிளைவுகள் இந்த மாத்திரைகளில் இருக்காது.

நான் கம்ப்யூட்டர் டிசைனராக வேலை செய்கிறேன். வயது 42. எனக்குக் கடந்த ஒரு வருடமாகவே கீழ் முதுகில் வலி. (டிஸ்க் பிரச்சினை). நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்தால் நிமிர முடியவில்லை. பிசியோதெரபி சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. இதற்கு வேறு தீர்வு காண்பது எப்படி? - முத்துகிருஷ்ணன்.

பொதுவாக, உங்கள் பிரச்சினைக்கு இயன்முறை சிகிச்சை (Physiotherapy) நல்ல பலனைத் தரும். நீங்கள் முறைப்படி இயன்முறை சிகிச்சையாளரின் மேற்பார்வையில் சரியான பயிற்சிகளைத் தேவையான கால அளவுக்குச் சிகிச்சை பெற்றீர்களா எனத் தெரியவில்லை. அப்படிப் பெற்றிருந்தும் உங்கள் பிரச்சினை தீரவில்லை என்றால், அடுத்தகட்ட சிகிச்சை அறுவைசிகிச்சைதான்.

தகுதி பெற்ற எலும்புநலச் சிறப்பு மருத்துவரையோ, முதுகுத் தண்டுவடச் சிறப்பு அறுவைசிகிச்சை வல்லுநரையோ (Spine Surgeon) ஆலோசித்துக்கொள்ளுங்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில் உங்கள் பிரச்சினையின் தீவிரம் உறுதிப்படும். அதற்கேற்ப உங்களுக்குத் தேவைப் படும் சிகிச்சையைப் பரிந்துரைப் பார்கள்.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in