

மாறி வரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் பல நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. இவற்றில் புற்றுநோய், மாரடைப்புக்குப் பிறகு மூளை பாதிப்பால் ஏற்படும் வாதநோய் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது.
மூளை சார்ந்த நோய்களும் அதிகரித்து வரும் சூழலில் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர் எம்.ஏ. அலீம் எழுதியுள்ள ‘நமது மூளை நமது எதிர்காலம்’ என்கிற நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நூலில் மூளை பாதிப்புகளால் ஏற்படும் வலிப்பு நோய், வாத நோய், டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி நோய் உள்ளிட்ட நோய்களின் வகைகள், அதற்கான சிகிச்சை முறைகள், தீர்வுகள் என பல அம்சங்களையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
மேலும் நீரிழிவு நோய் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள், தூக்கத் தொந்தரவுகள், ஆட்டிசம், கோடை - பனிக்காலத்தில் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்பட பலதரப்பட்ட பாதிப்புகளும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.மூளை பற்றியும் அதன் நோய்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் சிறந்த கையேடு.
நமது மூளை.. நமது எதிர்காலம்..
மருத்துவர்
எம்.ஏ. அலீம்
எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9944241270