எல்லா நலமும் பெற: ஜூஸா, பழமா… எது நல்லது?

எல்லா நலமும் பெற: ஜூஸா, பழமா… எது நல்லது?
Updated on
1 min read

சில மருத்துவ முறைகளில் தக்காளியைச் சாப்பிடக்கூடாதென்று ஏன் சொல்லப்படுகிறது?

தக்காளிகள் அமெரிக்கப் பூர்வீகத்தைக் கொண்டவை. மிளகு, உருளைக்கிழங்கு போல நைட்ஷேட் (அதிகம் சூரிய ஒளி படாத தாவர இனங்கள்) வகையைச் சேர்ந்தவை. நைட்ஷேட் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான தாவரப் பொருட்கள் சாப்பிடத் தகாதவை என்ற எண்ணம் உலகம் முழுக்க நிலவுகிறது. ஆனால் தெளிவான ஆய்வு முடிவுகள் எதுவும் இதற்குப் பின்னணியில் இல்லை. ஆர்த்ரைட்டிஸ், மைக்ரேன் தலைவலி உட்படப் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுவதால், இவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாம் இறந்த பிறகும் நகங்கள் வளருமா?

இல்லை. இறந்த சடலத்தில் நகத்தைச் சுற்றியுள்ள சதை சுருங்கி விடுவதால் நகம் பெரிதாக வளர்ந்துவிட்டதைப் போன்று தெரிகிறது, அவ்வளவுதான். நாம் உயிருடன் இருக்கும்போது ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் நாள்தோறும் நகம் வளர்கிறது.

பதற்றம், கவலையால் பற்கள் பாதிக்கப்படுமா?

மறைமுகமான பாதிப்புகள் இருப்பதாகத் தெரியவருகிறது. பல் தேய்வுக்கு நாள்பட்ட கவலை காரணமாகிறது. வாயின் ஆரோக்கியமும் கெட்டு, பற்சிதைவும் ஏற்படுகிறது.

முதுமையானவர்கள் தவறிவிழுவது அதிகமாக நடக்கிறதே ஏன்?

உடல், மூளைத்திறன் குறைவால் அவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். உலகம் முழுக்க மூன்றில் ஒரு முதியவர் வருடம்தோறும் இந்த விபத்தைச் சந்திக்கிறார். 65 வயதுக்கு மேலுள்ள முதியவர்களில் அதிகம் பேர் கீழே விழுவதாலேயே இறக்க நேர்கிறது.

சோடா பானங்களை அருந்துவதைவிட பழச்சாறைப் பருகுவது ஆரோக்கியமானதுதானே?

வைட்டமின் உள்ளிட்ட சத்துகளைக் கொண்ட பழச்சாறுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதான். ஆனால், பழச்சாறில் பழத்திலுள்ள நார்ச்சத்து கிடையாது. அத்துடன் சோடா பானங்களில் உள்ள சர்க்கரையும் பழச்சாறில் உள்ள சர்க்கரையும் ஒரே அளவுதான். அதனால் ஒரு கிளாஸ் ஆரஞ்ச் ஜூசைக் குடிப்பதற்குப் பதில், ஒரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடுவதே சாலச் சிறந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in