குழந்தைகளுக்கு நீரிழிவு நோய்: கவனம் தேவை

குழந்தைகளுக்கு நீரிழிவு நோய்: கவனம் தேவை
Updated on
1 min read

குழந்தைகளைப் பாதிக்கும் டைப்-1 நீரிழிவு நோய் ஆங்கிலத்தில் ‘Juvenile Diabetes’ எனப்படும். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சர்க்கரை அளவைப் பொறுத்து இன்சுலின் அளவை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். டைப்-1 நீரிழிவு நோயைப் பொறுத்தவரை கட்டாயம் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டி இருப்பதால், அலோபதி மருத்துவ முறையே இதற்குப் பொருந்தும்.

குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு மேலும் தீவிரமாகாமல் இருக்க கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத் தவிர, குழந்தைகளுக்கு அதிக இனிப்பு உணவைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உடலைப் பாதிக்கும் உணவுக்குக் கட்டுப்பாடு தேவை. பள்ளி வகுப்பு முடிந்த பின்பு மாலை நேரத்திலும் கூடுதல் வகுப்பு, படிப்பு எனப் பெற்றோர்கள் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. இந்தப் போக்கு முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் அதிக உடல் உழைப்பைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டியது அவசியம். 40 வயதுடைய பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களது குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நீரிழிவு நோயுள்ள பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக டைப்-1 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் அதிகம் தென்படாது. வேறு நோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் டைப்-1 நீரிழிவுக்கான அறிகுறிகள் தென்படும். அப்போது உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள், இளைஞர்கள் எனப் பெரும்பாலானோருக்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இதைப் பற்றி கவனக் குறைவாக இருந்துவிடாமல் வயதுக்கு ஏற்ற உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in