எல்லா நலமும் பெற: ரத்த அழுத்தம் குறைய… ரொட்டி!

எல்லா நலமும் பெற: ரத்த அழுத்தம் குறைய… ரொட்டி!
Updated on
1 min read

குழந்தைகளுக்காக விற்கப்படும் பால் மாவில் தேவையான சத்துக்கள் உள்ளனவா?

இயற்கையான தாய்ப்பாலுடன் ஒப்பிடும்போது பால் மாவில் சத்துக்கள் ஒன்றுமேயில்லை என்று சொல்லிவிடலாம். பால் மாவில் தீய கொழுப்பு, புரதம், இனிப்புப் பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட் சத்துக்காக இனிப்புச் சோள சிரப், சர்க்கரை ஆகியவை பால் மாவில் சேர்க்கப்படுகின்றன. தாய்ப்பாலில் உள்ள திட சர்க்கரைப் பொருட்களான லாக்டோஸ் போன்றவை பால் மாவில் குறைவாகவே உள்ளன. லாக்டோஸ் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவதும்கூட.

ரொட்டி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையுமா?

கோதுமை போன்ற தானிய ரொட்டியில் உள்ள கரையாத நார்ச்சத்துப் பொருள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாமல் 85 கிராம் அல்லது மூன்று ஸ்லைஸ் சாப்பிட்டால் போதுமானது.

ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?

மயக்கம், தலைவலி, பேதி, மலச்சிக்கல், எதிர்க்களித்தல், விறைப்புக் குறைபாடு, மாதவிடாய்க் கோளாறுகள், இதயப் படபடப்பு, பலவீனம், களைப்பு ஆகியவற்றோடு சிறுநீரகம், கல்லீரல் செயலின்மையும்கூட ஏற்படலாம்.

ரத்த அழுத்தத்தை ரத்த அழுத்த மாத்திரைகள் குறைக்கின்றனவா?

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள 9 ஆயிரம் பேரிடம் அமெரிக்காவில் பரிசோதனை நடத்தியதில், இந்த மாத்திரைகள் கொஞ்சம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன என்பது தெரியவந்துள்ளது. ஆனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றை இந்த மாத்திரைகளால் தடுக்க முடிவதில்லை.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

இதற்கு ‘வைட்டமின் டி’ குறைபாடுதான் மிக முக்கியமான காரணமென்று 90 சதவீத நிபுணர்கள் கருதுகின்றனர். வைட்டமின் டி - யில் சீரத்தின் அளவு 40 என்ஜி/எம்எல் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in