

பாதிப்புகளைப் பெண்கள் சந்தித்துவருகின்றனர். அதுவும் குறிப்பாக, மாதவிடாய் நின்ற பிறகு பெண்களின் உடலில் உண்டாகும் மாறுதல்களையும், அதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளையும் எவ்வாறு அணுகுவது என்கிற விழிப்புணர்வு பெண்களிடத்தில் முழுமை யாகச் சென்றடையவில்லை. தங்கள் மனநலம் சார்ந்த பிரச்சினைகளைக் குடும்பத்தினரிடம்கூட வெளிப்படையாகக் கூற முடியாத நிலையிலேயே பல பெண்கள் இன்றளவும் உள்ளனர்.
இந்தப் பின்னணியில் பெண்களின் உடல், மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கான காரணங்கள், பாதிப்புகள், சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்து சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை முன்வைத்து‘மகளிர் நலம்’ எனும் இந்நூல் எளிமையாக விளக்குகிறது. பணிக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவருக்கும் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் இந்நூல் நிச்சயம் மகளிருக்கான சிறு மருத்துவக் களஞ்சியமே. - இந்து
மகளிர் நலம், டாக்டர் வி.எஸ். நடராஜன்,
வெளியீடு: டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை,
விலை: ரூ. 150,
தொடர்புக்கு: 99529 20801.