ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள...

ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள...
Updated on
1 min read

நவீன உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஒவ்வாமையும் (Allergy), இதன் தொடர்ச்சியாக மூச்சிளைப்பும் (Asthma) வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வாமை எப்படியெல்லாம் வருகிறது, ஒவ்வாமையின் அறிகுறிகள் (Allergy Symptoms), ஒவ்வாமை நோயறிதல் (Allergy Diagnosis), கடும் ஒவ்வாமை (Anaphylaxis), மருந்து ஒவ்வாமை (Drug Allergy), கண் ஒவ்வாமை (Eye Allergy), உணவு ஒவ்வாமை (Food Allergy), மரப்பால் ஒவ்வாமை (Latex Allergy), வார்ப்பு ஒவ்வாமை (Mold Allergy), வளர்ப்பு விலங்கு ஒவ்வாமை (Pet Allergy), நாசி ஒவ்வாமை (Rhinitis), புரை ஒவ்வாமை (Sinusitis), தோல் ஒவ்வாமை (Skin Allergy), கொட்டும் பூச்சிகள் ஒவ்வாமை (Stinging Insect Allergy) போன்றவை குறித்த விளக்கங்களைத் தருகிறது அமெரிக்க ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் தடுப்பாற்றல் கழகத்தின் (American Academy of Allergy Asthma & Immunology) இணையதளம் (http://www.aaaai.org/home.aspx).

இந்த இணையதளத்தில் ஒவ்வாமை, மூச்சிளைப்பு நோய், தடுப்பாற்றலுடன் தொடர்புடைய சொற்கள் ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தலைப்புகளில் சொடுக்கினால் அந்தச் சொற்கள் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

‘நோயின் அறிகுறிகள் வழி தேடுதல்’ எனும் தலைப்பில் சொடுக்கினால் மெய்நிகர் ஒவ்வாமை மருத்துவர் (Virtual Allergist) என்னும் பக்கம் பார்வைக்குக் கிடைக்கிறது. இங்கு வலது பக்கத்தில் மனித உடல் படம் காணப்படுகிறது. இடதுபக்கத்தில் கண்கள், மூக்கு, தொண்டை, நுரையீரல்/மார்பு, வயிறு, தோல், மற்ற உடல் பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இங்குள்ள சொல்லின் மேல் சொடுக்கினால் குறிப்பிட்ட உடலின் பகுதியிலிருந்து நோயின் அறிகுறிகள் சில கிடைக்கின்றன. இதில் நாம் குறிப்பிட்ட அறிகுறியைச் சொடுக்கினால் அது குறித்த நோய்க் குறிப்புகள் கிடைக்கின்றன. நோய்க் குறிப்புகளின் மேல் சொடுக்கினால் அந்த நோய் குறித்த பக்கத்துக்குச் செல்கிறது.

அங்கு நோய் குறித்த முழுப்பார்வை (Overview), அறிகுறிகள் மற்றும் நோயறிதல் (Symptoms & Diagnosis), சிகிச்சை மற்றும் தொடர் கவனிப்பு (Treatment & Management) போன்ற தலைப்புகளில் அது குறித்த முழுமையான தகவல்களைப் பெற முடிகிறது. இவை தவிர நூலகம், மருத்துவத் துறையினருக்கான தகவல்கள், தொடர்புடைய தகவல்கள் எனக் குறிப்பிட்ட நோயுடன் தொடர்புடைய மேலும் பல தகவல்களுக்கான குறிப்புகளும் வலது புறம் இடம்பெற்றிருக்கின்றன.

மேற்கண்டவற்றைத் தவிர்த்து ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் தடுப்பாற்றல் குறித்த தொடர்கல்வி மற்றும் பயிற்சிகள், பயிற்சி மற்றும் ஆதாரங்கள் போன்ற வேறு தலைப்புகளில் பல தகவல்கள் இத்தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in