

– ஆர். கன்னிகா, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆன திரளை நெபுலா என்று அழைக்கிறார்கள். நெபுலாவிலிருந்துதான் நட்சத்திரங்கள் உருவாகின்றன. இப்படிப்பட்ட ஒரு நெபுலாவிலிருந்து சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் என்கிற நட்சத்திரம் உருவானது.
மீதிப் பொருள்கள் எல்லாம் சேர்ந்து கோள்களாகவும் நிலாக்களாகவும் குறுங்கோள்களாகவும் வால் நட்சத்திரங்களாகவும் உருவாகின.
சுழற்சி விசையோடு இவை உருவானதால், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பூமியும் பிற கோள்களும் சுற்றிவருகின்றன.
வெள்ளி கோள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிவருகிறது. சூரியன் தன்னுடைய ஈர்ப்பு விசையால் கோள்களை இழுத்துக்கொள்ள முடியும். சூரியனிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் கோள்களும் அதை எதிர்த்து வேகமாகச் சுழல வேண்டும்.
அதனால்தான் சூரியனுக்கு அருகில் உள்ள புதன், வெள்ளி கோள்கள் அசுர வேகத்தில் சுற்றிவருகின்றன. பூமியைப் பொறுத்தவரை அதனுடைய வேகத்தை, துணைக்கோளான நிலா தடை செய்கிறது. இதனால் தான் கடலில் ஓதம் (tide) ஏற்படுகிறது.
பூமி உருவான காலத்தில் நிலா அருகே இருந்தது. அப்போது பூமியின் வேகம் அதிகமாக இருந்ததால், ஒரு நாள் என்பது 6 மணி நேரமாக இருந்தது. நிலா தொலைவுக்குச் செல்லச் செல்ல, பூமியின் வேகமும் குறைந்து வருகிறது.
இதனால் இன்று ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக ஆகிவிட்டது. இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் செல்லச் செல்ல பூமியில் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும், கன்னிகா.