மஞ்சள் பச்சை இளஞ்சிவப்பு | டிங்குவிடம் கேளுங்கள்

மஞ்சள் பச்சை இளஞ்சிவப்பு | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on: 
1 min read

வெவ்வேறு நிறங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோக்கள் குறித்து விளக்க முடியுமா, டிங்கு? - ஜி. இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

மஞ்சள் வண்ண ஆட்டோக்கள் வணிகப் பயணத்துக்கு உரியவை. நாம் பெரும்பாலும் இந்த ஆட்டோக்களைத்தான் பயன்படுத்துகிறோம். பச்சை வண்ண ஆட்டோக்கள் பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்பட்டு, அதன் மூலம் இயங்குகின்றன. சில ஆட்டோக்கள் கேஸ் மூலமும் இயங்குகின்றன.

இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோக்கள் பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படுகின்றன. வேறு சில வண்ணங்கள் தனியாருக்குச் சொந்தமானவை, இனியா.

நாய்கள் ஏன் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிகின்றன, டிங்கு? – செ. அர்ஜுனாமூர்த்தி. 5-ம் வகுப்பு. ஊ.ஒ.ந. நிலைப் பள்ளி. தங்களாச்சேரி, மதுரை.

மனிதர்களைப் போல நாய்களுக்கு உடல் முழுவதும் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. பாதங்களிலும் குறைந்த அளவே வியர்வையை வெளியேற்ற முடியும்.

எனவே, உடலின் வெப்பநிலையைக் குறைப்பதற்காக நாய்கள் மூச்சை வேகமாக இழுத்து, வாய் வழியே காற்றை வெளியிடுகின்றன.

அப்போது உமிழ்நீர் ஆவியாகிறது. இதன் மூலம் உடலின் வெப்பநிலையைக் குறைத்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடிகிறது. எனவே நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிகின்றன, அர்ஜுனாமூர்த்தி.

மஞ்சள் பச்சை இளஞ்சிவப்பு | டிங்குவிடம் கேளுங்கள்
உலக அரசியலை மாற்றியமைத்த நைட்ரஜன் சுழற்சி | அறிவியல் திருப்புமுனைகள் 25 - நைட்ரஜன் சுழற்சி

X