மீண்டும் நிலவுக்கு மனிதப் பயணம் | வானம் நமக்கொரு போதிமரம் 26

மீண்டும் நிலவுக்கு மனிதப் பயணம் | வானம் நமக்கொரு போதிமரம் 26
Updated on
2 min read

நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி ஏவப்பட்டது. ஐந்து நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, ஏப்ரல் 6, 2026 அன்று, ஆர்டெமிஸ் 2 குழுவினர் நிலவை வெற்றிகரமாக வலம்வந்தனர். நாசா விண்வெளி வீரர்கள் ரீட் விஸ்மேன், விக்டர் குளோவர் (நிலவுப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க விண்வெளி வீரர்), கிறிஸ்டினா குக் (நிலவுப் பயணம் மேற்கொள்ளும் முதல் பெண்), கனடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் நிலவின் மறுபக்கத்தைக் கடந்து சுற்றிவந்தனர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலவுக்கு மிக அருகில் சென்று திரும்பினர்.

இந்தப் பயணம் இதுவரை மிகவும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. ஆழ்வெளிக்கு மனிதர்களைச் சுமந்து செல்லும் ‘ஓரியான்’ விண்கலத்தின் செயல்பாட்டைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். கழிவறை, தொடர்பு அமைப்புகளில் சிறிய கோளாறுகள் இருந்தபோதிலும், இந்த விண்கலம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in