வானில் பறந்த ட்ரோன்கள் | கதை

வானில் பறந்த ட்ரோன்கள் | கதை
Updated on
1 min read

சென்னையில் சூரியன் உதித்ததும் வானில் பறவைகளுக்கு நடுவில் ’வீ…வீ…வீ…’ என்கிற சத்தம் கேட்டது. மக்கள் மேலே பார்த்தார்கள்.

ஏராளமான ட்ரோன்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு ட்ரோனும் ஒரு வேலை செய்தது. “அம்மா, அந்த ட்ரோன் பால் கொண்டு வருது!” என்று கண்ணன் கத்தினான். “இந்த ட்ரோன் மருந்து!” “அது காய்கறி!” “ஹை! அது ஐஸ்க்ரீம்!” ஆம்! சென்னை நகரத்தில் ‘வான விநியோகத் திட்டம்’ தொடங்கப்பட்டிருந்தது.

மக்கள் கடைக்குப் போக வேண்டியது இல்லை. ட்ரோன்களே வீட்டுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்கும். ஒரு நாள் கண்ணன் வீட்டு வாசலில் சிறிய ட்ரோன் வந்து இறங்கியது. “ஹலோ, கண்ணன்!” “அப்பா... அம்மா... இங்க ஒரு ட்ரோன் வந்திருக்கு, அது பேசுது!” என்று கண்ணன் கத்தினான்.

“என் பெயர் டி-3. நான் உங்களுக்கு உதவ வந்தேன்.” கண்ணனின் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தன. “நீ எப்படிப் பேசுற?” “செயற்கை நுண்ணறிவு. பேசவும் வழி கண்டறியவும் தெரியும்.” ஒரு மாலை நேரத்தில் நகரில் பரபரப்பு. பெரிய குழப்பம் ஏற்பட்டது. ட்ரோன்கள் எல்லாம் இங்கும் அங்கும் சுற்றிச்சுற்றிப் பறந்தன.

“பால் வரல.” “மருந்து வரல.” “ஐஸ்கிரீம் எங்கே?” கண்ணன் உடனே டி-3யை அழைத்தான். “என்ன ஆச்சு?” “ஜிபிஎஸ் வேலை செய்யல. நாங்க வழி தவறிட்டோம், சரியான பாதையைக் கண்டறிய முடியல.”

“ஜிபிஎஸ் இல்லாமல் நீங்க வழி கண்டறிய முடியாதா?” “முடியும்… மனிதர்களைப் போலச் சிந்திக்கும் திறன் இருந்தால்!” வீட்டிலிருந்த நகரின் வரைபடத்தை எடுத்த கண்ணன், “இது என் பள்ளி. இது மருத்துவமனை.

இது மார்க்கெட். இதைப் பார்த்துப் பறக்க முடியுமா?” என்று கேட்டான். “மிகச் சிறந்த யோசனை, கண்ணன்!” என்று சொல்லிவிட்டு, அந்த வரைபடத்தை ஸ்கேன் செய்தது டி.3. “ட்ரோன்களுக்கு முக்கிய அறிவிப்பு.

இந்த வரைபடத்தைப் பின்பற்றுங்கள்!” என்று எல்லா ட்ரோன்களுக்கும் அனுப்பி வைத்தது. உடனே ட்ரோன்கள் சரியாகப் பறக்க ஆரம்பித்தன. சில நிமிடங்களில்… பால் வந்தது. மருந்து வந்தது.

ஐஸ்கிரீமும் வந்தது! மக்கள் மகிழ்ந்தார்கள். நகர மேயர் கண்ணனைப் பாராட்டினார். “தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. ஆனால், மனிதர்களின் அறிவும் கருணையும் சேரும்போதுதான் அது சிறப்பாக வேலை செய்யும்.” மீண்டும் ட்ரோன்கள் பறந்தன.

வானில் பறந்த ட்ரோன்கள் | கதை
கம்பளி ஆடை | கதை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in