ஒரு கடிதம் எழுதுகிறேன்...

ஒரு கடிதம் எழுதுகிறேன்...
Updated on
1 min read

உலகத் தலைவர்கள் அனைவருக்கும், வணக்கம்.

நீங்கள் நலம். ஆனால், மேற்கு ஆசியாவில் உள்ள மக்கள் நலமாக இல்லை. குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் எல்லாம் உணவு, தண்ணீர், மருத்துவம் கிடைக்காமல் கஷ்டப்படுவதை ஊடகங்களில் பார்க்கும்போது தாங்கவே முடியவில்லை. குண்டுகளால் அழிந்துகொண்டிருப்பவை வெறும் எண்ணெய்க் கிணறுகள் அல்ல. அவை உலகின் உயிர்நாடி. அவற்றை எல்லாம் அழித்துவிட்டு எப்படி வாழப் போகிறோம்?

ஐ.நா. சபை என்று ஒன்று இருக்கிறதே, அதன் மூலம் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, இந்தப் போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடாதா? அதிக விஷயங்கள் தெரியாத எங்களுக்கே போர் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நன்கு புரியும்போது, எல்லாம் அறிந்த தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. இந்தப் போரால் போர் நடைபெறும் நாடுகள் மட்டுமல்லாமல், ஏராளமான நாடுகளும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களைப் போன்ற எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையையும் சற்று நினைத்துப் பாருங்கள். அன்பை மிஞ்சிய ஆயுதம் வேறு உண்டா? விரைவில் போரை நிறுத்துங்கள். மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

இப்படிக்கு,

- பி. விஷ்வஜித், 9-ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக். பள்ளி, தஞ்சாவூர்.

- பி. நந்தினி, 2-ம் வகுப்பு, அமல்ராஜ் மெட்ரிக். பள்ளி, திருவையாறு.

- கே. அக் ஷிதா, 4-ம் வகுப்பு, சியோன் மெட்ரிக். பள்ளி, சேலையூர், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in