விலங்குகளும் குறட்டை விடுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

விலங்குகளும் குறட்டை விடுமா? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on: 
1 min read

மனிதர்களைப் போலவே தூங்கும்போது குறட்டை விடும் விலங்குகள் இருக்கின்றனவா, டிங்கு?

– எம். பிரபுவிந்தா, 7-ம் வகுப்பு,

ஊ.ஒ.ந.நி. பள்ளி, சின்னபள்ளத்தூர், தர்மபுரி.

ஆமாம், தூங்கும்போது பல விலங்குகள் குறட்டை விடுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகள் தூங்கும்போது கவனித்திருந்தால், அவை குறட்டை விடுவதைப் பார்த்திருக்கலாம். நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.

இந்தப் பாதையில் ஏதாவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. நாம் தூங்கும்போது மூச்சுக்குழாய்த் தசைகள் தளர்வடைகின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுவதாலும் நாக்குச் சற்றுத் தொண்டைக்குள் இறங்கி விடுவதாலும் காற்று உள்ளே செல்லும்போது குறட்டை உருவாகிறது. குதிரை, கரடி, சிங்கம், புலி போன்ற பல விலங்குகளும் குறட்டை விடுகின்றன, பிரபுவிந்தா.

விலங்குகளும் குறட்டை விடுமா? | டிங்குவிடம் கேளுங்கள்
மழையைக் கொண்டுவந்த காகிதக் கப்பல்! | சூடான் நாட்டுப்புறக் கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in