பாட்டும் கருத்தும் | விடுமுறையில் வாசிப்போம்

பாட்டும் கருத்தும் | விடுமுறையில் வாசிப்போம்
Updated on
1 min read

சிறாருக்காக அதிகப் பாடல்களை எழுதி வருபவர் குருங்குளம் முத்துராஜா. இவருடைய ‘காட்டுக் குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’ பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது வெளியாகியுள்ள ‘அக்கா குருவி’ தொகுப்பில் 50 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தேவதைக் கதைகளில் பறக்கும் குதிரையைப் பார்த்திருப்போம், முத்துராஜாவின் பாடல்களில் பன்றியும் பறக்கிறது. எதிலும் தேவையில்லை ஏற்றத்தாழ்வு என்பதே அவர் கருத்து.

‘ஐந்து எழுத்துப் புதையல்’ என்று புத்தகத்தை விவரிக்கிறார். ‘உயிருடன் வருகிறோம்’ பாடல், குழந்தைகளுக்கு உயிரெழுத்துகளைக் கற்பிக்க உதவும். ‘மூக்கு அழகுப் போட்டி’ பறவைகளின் அலகுகளைப் பற்றி விவரிக்கிறது.

‘டெல்லி போற ரயில்’ பாடல், வேற்றுமையில் ஒற்றுமையை எளிமையாகக் கற்றுத் தருகிறது. ‘தும் தும் தும் உடுக்கடி’ போன்ற பாடல்களை ஆட்டத்துடன் நிகழ்த்தியே காட்டலாம்.தலைப்புப் பாடலான ‘அக்கா குருவி’ குறித்த பாட்டு, கதைப் பாடல் போல் உள்ளது.

அதேபோல் ராஜஸ்தானில் கெஜர்லி (வன்னி) மரங்களை வெட்டுவதை 300 ஆண்டுகளுக்கு முன் தடுத்த அம்ரிதா தேவி குறித்த பாடல் நல்ல முயற்சி. இவற்றுடன் விடுகதைப் பாட்டு, கிச்சுகிச்சுத் தாம்பாளம், மீனவர்களைப் பற்றி விவரிக்கும் ‘ஏலேலோ ஐலசா’ போன்ற நமது கிராமத்து விஷயங்களை நினைவுபடுத்தும் பாடல்கள் முக்கியமானவை.

‘எவரும் இங்கே பட்டினி யால் சாகாமல் தடுக்கணும்’, ‘பல்லி கத்துவதற்கு பலன் பார்க்காமல் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்’ எனக் கருத்துகளை எளிமை யாகவும் அழகாகவும் தந்திருக்கிறார் முத்து ராஜா.

அக்கா குருவி-சிறார் பாடல்கள்,

குருங்குளம் முத்துராஜா, மேஜிக் லாம்ப்

(எதிர் வெளியீடு), தொடர்புக்கு: 99425 11302

பாட்டும் கருத்தும் | விடுமுறையில் வாசிப்போம்
அரிசி சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வருமா? | டிங்குவிடம் கேளுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in