

அழ.வள்ளியப்பா எழுதிய குழந்தைப் பாடல்களைப் பாடாத குழந்தைகள் இருக்க முடியாது. அவருடைய நூற்றாண்டு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்தப் பின்னணியில்
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில், 200 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பை உருவாக்கியிருப்பவர் அழ.வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன்.
இந்த நூலில் வயது அடிப்படையில் பாடல்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது, வாசிப்போருக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்குத் தமிழை எளிதாகக் கற்றுக்கொடுப்பதற்கு இந்தப் பாடல்களைப் பாடிப் பழகுவது உதவும். சரியான தமிழ்ச் சொற்களை உள்வாங்கிக்கொள்ளவும் பயன்படுத்தவும் இந்தப் பாடல்கள் கைகொடுக்கும்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
பாடல் தொகுப்பு,
தொகுப்பாசிரியர்: தேவி நாச்சியப்பன், சாகித்திய அகாதெமி,
தொடர்புக்கு: 044-24311741