

‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே’ என்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆப்பிரிக்க மக்களைப் பிடித்து அடிமைகளாக்கி, விலங்குகளைவிடக் கொடூரமாக நடத்தும் பழக்கம் 18 ஆம் நூற்றாண்டில் தீவிரமாகத் தொடங்கியது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். பிரிட்டனும் ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தில் முக்கியப் புள்ளியாக இருந்திருக்கிறது.
இப்படி லண்டனில் வாழ்ந்த ஒலாடா என்கிற ஆப்பிரிக்க அடிமை, பெரும் போராட்டத்துக்குப் பின் எப்படிச் சுதந்திரம் பெறுகிறார், அதன் பிறகு அடிமைத்தனத்துக்கு எதிராக எப்படிப் போராடுகிறார் என்று சொல்கிறது ஒலாடாவின் கதை. மனிதர்கள் பாகுபாடாக நடத்தப்படுவது ஏன் தவறு என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தும் குறிப்பிடத்தக்க இளையோர் நூல் இது.
ஒலாடா, பஞ்சு மிட்டாய் பிரபு,
ஓங்கில் கூட்டம்-புக்ஸ் ஃபார் சில்ரன்,
தொடர்புக்கு: 9498062424