கதைகள் தரும் மகிழ்ச்சி!
என் கனவின் கதை, அரசுப் பள்ளிக் குழந்தைகள் எழுதிய கதைகள், தொகுப்பு: நெ.ஷ்யாம்சுந்தர், சா. ஹரிணி, தன்னறம் நூல்வெளி, தொடர்புக்கு: 98438 70059
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் ‘இளம் வாசகர் வட்டம்’ நடத்தப்பட்டுவருகிறது. இதில் பங்கேற்ற கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தொகுத்தவர்களும் மாணவர்களே. கதை எழுதியது மட்டுமல்லாமல் பிரபல சிறார் எழுத்தாளர்கள் ஜெகதிஷ் ஜோஷி, ஜெயந்தி மனோகரன், உத்பல் தாலுக்தார் ஆகியோர் எழுதிய கதைகளை மொழிபெயர்த்தும் இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே கதை எழுதுவதாக இந்தக் குழந்தைகள் சொல்கிறார்கள். அது உண்மை என்பதை இக்கதைகளைப் படிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். தொடர் வாசிப்பு குழந்தைகளுக்கு என்ன தரும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
