

கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. மிகப் பழமையான நாகரிகம்கொண்ட நாடு. கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக மாற்றங்களைச் சந்தித்த நாடும் இதுவே.
2. பட்டாசு, பட்டு, தேநீர், பட்டம், ஐஸ்க்ரீம், காகிதம், காந்தத்தால் ஆன காம்பஸ் போன்றவை இங்கே கண்டுபிடிக்கப்பட்டதால், ‘கண்டுபிடிப்புகளின் நாடு’ என்றும் அழைக்கப்பட்டது.
3. பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் நாடு.
4. உலக அதிசயங்களில் ஒன்று இங்கே இருக்கிறது.
5. 1949-ம் ஆண்டு பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்று, மக்கள் குடியரசு நிறுவப்பட்டது.
6. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய நாடு.
7. பாண்டா இந்த நாட்டின் தேசிய விலங்கு.
8. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.
9. இந்த நாட்டின் தேசத் தந்தை மாவோ.
10. கிழக்கு ஆசியாவிலுள்ள இந்த நாட்டின் மிகப் பெரிய நகரம் ஷாங்காய்.
விடை: சீனா