

அறிவொளி இயக்கக் காலம் தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக ‘துளிர்’ அறிவியல் இதழ் வெளியாகிவருகிறது. மாணவர்களுக்கான அறிவியல் இதழான துளிர், ஐ.எம்.எஸ்.சி. 60 (சென்னை கணிதவியல் நிறுவனம் தொடங்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு விழா) சிறப்பிதழைச் சமீபத்தில் வெளியிட்டது.
ஆர். ராமானுஜம், இந்துமதி, கமல் லொடயா, த.வி. வெங்கடேஸ்வரன், அருணந்தி, பொ. ராஜமாணிக்கம், அ. வள்ளிநாயகம், சி. ராமலிங்கம்,எஸ். தினகரன், சோ. மோகனா, ஜனார்த்தனன், அருணா ரத்னம், குமரன் சதாசிவம், ப. ஜெகநாதன், யூமா வாசுகி, ஹரிஷ், தேமொழிச்செல்வி, நாராயணி சுப்ரமணியன், இ. ஹேமபிரபா உள்ளிட்ட பலருடைய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
‘துளிர்’ இதழ் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது குறித்து பஷீரும், சென்னை கணிதவியல் நிறுவனம் குறித்து ஆர். ராமானுஜமும் கட்டுரைகளை எழுதியுள்ளனர். வானியல், வேதியியல், தொழில் நுட்பம், கணிதம், புவியியல், இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர், வரலாறு, தொல்லியல், அறிவியல் செயல்முறைகள், அறிவியல் மேதைகள், சமூக அறிவியல் என நேரடி அறிவியல் துறைகள் சார்ந்து மட்டுமில்லாமல், பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
அறிவியல் எழுத்து சார்ந்து இடைவிடாத தொடர்ச்சியைக் கொண்டுள்ள ‘துளிர்’ இதழில் வெளியான முக்கியமான கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் குழந்தைகளுக்கான ஆங்கில அறிவியல் இதழான Jantar Mantar - IMSC 60 சிறப்பிதழும் வெளியாகியுள்ளது.
தேவைப்படுபவர்கள் இந்த இதழ்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிலோ, இணையதளத்திலோ தொடர்புகொண்டு பெறலாம்: 044 28113630, tnsf.co.in
- நேயா