ஊர்ப் புதிர் 03: அழகான சிகரங்கள்!

ஊர்ப் புதிர் 03: அழகான சிகரங்கள்!
Updated on
1 min read

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்று கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்து விட்டால் நீங்கள் பெரிய புத்திசாலி.

1. இந்த நாட்டின் பழைய பெயர் ஹிமவந்தா.

2. ஒளிப்படத்தில் உள்ள மலைச் சிகரம் இந்த நாட்டில் உள்ளது.

3. இரு வருடங்களுக்கு முன் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடு.

4. இங்கு இந்தியர்கள் செல்ல விசா தேவையில்லை.

5. மிக வித்தியாசமான வடிவம் அமைந்த கொடியைக் கொண்ட நாடு.

6. ஒளிப்படத்தில் உள்ள பிரபல முக்திநாத் ஆலயம் இங்குள்ளது.

7. இந்த நாட்டின் மூன்று எல்லைகளாக இந்தியா உள்ளது.

8. இங்கு வசிப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

9. பசுவதை இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.

10. புத்தர் பிறந்த இடம் இங்குள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in