புதிய சிறார் நூல்கள்

புதிய சிறார் நூல்கள்
Updated on
1 min read

46ஆவது சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி பல்வேறு சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் யூமா வாசுகியின் நேரடிக் கதைகளின் தொகுப்பான ‘தன்வியின் பிறந்தநாள்’ (புக்ஸ் ஃபார் சில்ரன்) வெளியாகியிருக்கிறது. அறிவியல் சிந்தனையின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் அறிவியலாளர் புஷ்பா எம். பார்கவாவின் ‘கேள்வி கேள்’ (விடியல் பதிப்பகம்) நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சா.சு. நந்தினி, க.வி. இலக்கியா மொழிபெயர்த்துள்ளனர்.

குழந்தை நேயக் கல்வியை வலியுறுத்திச் செயல்பட்டுவரும் ஆசிரியர்களின் சிறார் படைப்புகளும் வெளியாகியுள்ளன. கி. அமுதா செல்வியின் ‘வால் முளைத்த பட்டம்’, சக. முத்துக்கண்ணனின் ‘புது றெக்கை’, ச.முத்துக்குமாரியின் ‘டாமிக்குட்டி’ இவை அனைத்தும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு.

குழந்தைகளுடனான தன்னுடைய அனுபவங்கள் குறித்து தேவி நாச்சியப்பன் எழுதிய ‘குழந்தைகள் உலகம்’ (மணிவாசகர் பதிப்பகம்), சாலை செல்வம் எழுதியுள்ள ‘தோழியின் தின்பண்டங்கள்’ (இயல்வாகை), சிறார் எழுத்தாளர் ஹரி எழுதிய ‘காய்ந்த மரம்’, ‘ஆசையை நிறைவேற்றும் மரம்’ (குட்டி ஆகாயம் வெளியீடு) ஆகிய கதை நூல்களும் வெளியாகியுள்ளன. ஞா. கலையரசியின் ‘நீலமலைப் பயணம்’, சரிதா ஜோவின் ‘கடலுக்கு அடியில் மர்மம்’, லக் ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘நெல் விளைந்த கதை’ ஆகியவை புக்ஸ் ஃபார் சில்ரனின் பிற கதை வெளியீடுகள்.

சிறார் மொழிபெயர்ப்பு நூல்களில் ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரியின் ‘சின்னஞ்சிறு இளவரசன்’ (காலச்சுவடு) நூலை எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தர ராஜனின் ‘குளோன்சியின் சாகசங்கள்’ (நேஷனல் புக் டிரஸ்ட்) நூலை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். ச.சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் மைதிலி மொழி சிறார் கதைகள் ‘கிளியும் அதன் தாத்தாவும்’ (புக்ஸ் ஃபார் சில்ரன்) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளன. ஷ்வேதா கணேஷ் குமாரின் ‘என்ன வீடு கட்டலாம்’, லபோனீ ராயின் ‘மைனா சூரியனை சாப்பிட்டது எப்படி?’ ஆகிய நூல்களை பிரதம் புக்ஸ் வெளியிட்டுள்ளது.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் அவருடைய குழந்தை இலக்கியப் பணி வெள்ளி விழா மலர் (பழனியப்பா பிரதர்ஸ்) மீண்டும் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in