புதிய புத்தகம்: கிப்ளிங்கின் காடு

புதிய புத்தகம்: கிப்ளிங்கின் காடு
Updated on
1 min read

“தான்சேன், எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அற்புதமாகப் பாட முடிகிறது?” என்று அக்பர் கேட்டார். “என்னதான் மன்னராக இருந்தாலும் நீங்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர். என்னால் உங்களுக்குப் பாட முடியாது என்று நான் சொல்லியிருந்தால், என் பாடலில் இருந்து இனிமை பிரிந்து சென்றிருக்கும்.

ஒரு எளிய மனிதனாக நான் என் பாடலைப் பாடுகிறேன். ஒரு எளிய மனிதனாக நீங்கள் என் பாடலைக் கேட்கிறீர்கள். நாம் இருவரும் ஒரே தளத்தில் கரம் கோத்து நிற்கிறோம். என் இதயத்திலிருந்து உங்கள் இதயத்தை வந்து அடைகிறது என் பாடல். அந்தக் கணத்தில் என் பாடல் நம் பாடலாக உருமாறுகிறது. மாயங்களும் நிகழ ஆரம்பிக்கின்றன” என்று தான்சேன் சொன்ன பதில், அவர் பாடலைப் போன்றே இனிமையாக இருக்கிறது!

இதுபோன்று உங்களின் விருப்பத்துக்குரிய மாயாபஜாரின் ‘மாய உலகம்’ பகுதியில் வெளிவந்த 25 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இப்போது புத்தகமாகக் கிடைக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்!

மருதன், ரூ. 120/-,

இந்து தமிழ் திசை பதிப்பகம்.

தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402

ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in