

வித்தியாசம் என்ன?
மேலே இருக்கும் இரண்டு படங்களுக்கும் இடையே வித்தியாசம் என்ன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
வார்த்தைக் குடும்பம்: ‘க’ என்றால் கரடியா? கழுதையா?
‘க’ வரிசையில் தொடங்கும் எழுத்துகளை வைத்து பெயர்சொற்களை உருவாக்குங்கள் பார்ப்போம். அவை உயிரினங்கள், பொருட்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ( நீங்கள் எத்தனை பெயர்சொற்களை வேண்டுமானாலும் தனியாக எழுதலாம்.)
க__________
கா__________
கி__________
கீ__________
கு__________
கூ__________
கெ__________
கே__________
கை__________
கொ__________
கோ__________
கௌ__________
விடுகதை
1. பெரிய அண்டாவுக்குப் பொத்தலே வராது. அது என்ன?
2. காலை எழுப்பும் கடிகாரம்; வாயே அதற்கு ஆதாரம். அது என்ன?
3. கல்லைச் சுமந்தவன் கறிக்கு ருசி. அவன் யார்?
4. சின்ன வெங்காயம், வீடெல்லாம் சிங்காரம். அது என்ன?
5. கடித்தால் கடிபடாதவன், பிடித்தால் பிடிபடாதவன். அவன் யார்?
6. மூன்று போலீஸ்காரருக்கு ஒரே தொப்பி. அது என்ன?
7. விரித்த பாயைச் சுருட்ட முடியாது. அது என்ன?
8. ரொம்ப வந்தால் சங்கடம், வராமல் போனால் வில்லங்கம். அது என்ன?
9. உடல் சிவப்பு, வாய் சிவப்பு, உணவோ காகிதம். அது என்ன?
10. கிணற்றைச் சுற்றி வெள்ளைக் கல். அது என்ன?
விடுகதை போட்டவர்: செ. வாசிம்கான்,
9-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, விளாங்குளம்,
தஞ்சாவூர்.