மேஜிக் பழகலாம்: மாயமாய் கோத்த மணிமாலை

மேஜிக் பழகலாம்: மாயமாய் கோத்த மணிமாலை
Updated on
2 min read

மணி மாலையை வைத்து மேஜிக் செய்ய முடியும் தெரியுமா? அதை எப்படிச் செய்வது எனப் பழகிப் பார்க்க நீங்கள் தயாரா?

தேவையான பொருட்கள் :

ஒரே மாதிரியான மணி மாலை - 2

கண்ணாடி டம்ளர் - 2

காகித பை - 2 (ஒன்று சிறியது)

பசை, கத்தரிக்கோல்

மேஜிக்:

மேஜிக் செய்வதற்கு முன்பாக ஒரு பெரிய காகிதப் பைக்குள் கோத்த மணிமாலையை வைக்கவும். அந்தப் பைக்குள் ஒரு சிறிய காகிதப் பையை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு இருபக்கவாட்டில் ஒட்டிக்கொள்ளவும். இப்போது இந்தப் பையில் எதுவுமில்லை என்பதைப் பார்வையாளர்கள் முன்னிலையில் காட்டவும்.

பின்னர் மணி மாலை ஒன்றைக் காட்டி, அதைக் கத்தரித்து மணிகளை உதிரியாகப் பிரிக்கவும். அதை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு, இதை மற்றொரு கண்ணாடி டம்ளரில், டீ ஆற்றுவது போல் பலமுறை கொட்டிக் காண்பிக்கவும். பின்னர் அதைச் சிறிய காகிதப் பையில் கொட்டி வாய்ப் பகுதியை மடித்து ஒட்டிவிடுங்கள்.

பசை

இதோ மேஜிக் பாருங்கள்... மாயமோ, மந்திரமோ இல்லை என்று சொல்லி பையின் உள்ளே கைவிட்டு சிறிய பையின் அடிப்பாகத்தைப் படத்தில் காட்டியபடி விரல்களால் கிழித்து உள்ளிருக்கும் முழுமையாகக் கோத்த மணிமாலையை எடுத்து உயர்த்தி காட்டுங்கள். எடுத்துக்காட்டுங்கள். இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும்.

இந்த மேஜிக்கை ஒருமுறைக்கு இருமுறை செய்து பார்க்கவும். பின்னர் பார்வையாளர்கள் மத்தியில் செய்து காட்டவும்.

மேஜிக், ஓவியம்: ஆர்.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in