Published : 23 Nov 2022 06:36 AM
Last Updated : 23 Nov 2022 06:36 AM

புதிய புத்தகம்: நான் ஒரு கனவு காண்கிறேன்!

‘என் கனவில் வெள்ளை அமெரிக்கா கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டு தன் நூற்றாண்டு காலத் தவறுக்கு மன்னிப்பு கோரும். கறுப்பு அமெரிக்கா வெள்ளை அமெரிக்காவை அணைத்துக்கொள்ளும். என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கறுப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகுவாள்.

என் கனவில் தேவாலயத்தில் கறுப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருப்பார்’ என்கிற மார்டின் லூதர் கிங்கின் கனவைப் படிக்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா! இதுபோன்று உங்களின் விருப்பத்துக்குரிய மாயாபஜாரின் ‘மாய உலகம்’ பகுதியில் வெளிவந்த 25 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இப்போது புத்தகமாகக் கிடைக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்!

மருதன், ரூ. 130/-,
இந்து தமிழ் திசை பதிப்பகம்.
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x