

வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையில் 7 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
விடுகதை
1. என்னைப் பார்க்க முடியும்; எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத் தில் போட்டால் அதன் அளவைக் குறைப்பேன். நான் யார்?
2. என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை. ஆனால், ஓசை எழுப்புவேன். நான் யார்?
3. கறுப்பான என்னை மிகவும் தேடினால் கிடைப்பேன். நான் யார்?
4. மனிதர்கள் ரொம்ப நேரம் என்னைப் பிடித்து வைக்க முடியாது. நான் யார்?
5. எனக்கு நுரையீரல் இல்லை. ஆனால், காற்று இல்லாவிட்டால் நான் இல்லை. நான் யார்?
6. நான் அழுது கரைந்தால்தான் எல்லோருக்கும் கிடைக்கும் வெளிச்சம். நான் யார்?
7. எனக்குத் தொண்டை கிடையாது. நான் ஓசை எழுப்பினால் தூரத்தில்கூடக் கேட்கும். நான் யார்?
8. நான் சூரியனைக் கடந்து சென்றாலும்கூட என் நிழல் தெரியாது. நான் யார்?
9. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?
10. இது பேசினால் கேட்க முடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. அது என்ன?
விடுகதை போட்டவர்: எஸ். சுருதி, 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அவனியாபுரம், மதுரை.